இதுவரை எட்டு அணி, இதுக்கு மேல் ஒரே அணி! புறப்பட்ட இந்திய அணி! புகைப்படங்கள் வெளியீடு!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 13-வது சீசன் கடந்த செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி, நவம்பர் 10 நேற்று வரை நடைபெற்றது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட மெகா தொடரில் விளையாட உள்ளது. 

இந்த தொடரின் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அனைத்து வீரர்களும் இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர். 

ஐபிஎல் தொடர் முடிந்த மறுநாளே ஓய்வின்றி அப்படியே சென்றுள்ளனர். அங்கே தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சில நாட்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian squad fly to australia


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal