சரியாக ஆடாத இந்திய வீரர்! அணியில் இருந்தே நீக்கி அதிரடி! மீண்டும் அணிக்கு திரும்பிய வீரர்!   - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில் தொடரை 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த நிலையில் இரண்டாவது போட்டி சென்னையில் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான அணியில் கடந்த போட்டியில் ஆடிய ஷாபாஸ் நதீம் மற்றும் அணியில் இடம்பெற்று இருந்த ராகுல் சாஹர் இருவரையும் இந்திய அணி நிர்வாகம் விடுத்துள்ளது.  

சென்னை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அக்சர் படேல் இறுதி நேரத்தில் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஷாபாஸ் நதீம் மற்றும் ராகுல் சாகர் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த போட்டியில் சோபிக்காதே நிலையில் அவரை அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. 

இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்த, அக்சர் படேல் உடல் தகுதி பெற்று விட்டதால் இன்று பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த போட்டியில் இடம்பெறாமல் போன குல்தீப் யாதவ் அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஏற்கனவே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மீண்டும் விமர்சனங்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Cricketer Re Entry Indian Team 11 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal