வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. முக்கிய வீரர்களுக்கு ஓய்வு.! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான  இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி, பும்ரா, சாஹல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேஎல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். 

 இந்திய அணி :

ரோகித் சர்மா, இஷான் கிஷன், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், பாண்ட்யா, ஜடேஜா, அக்சர் படேல், அஷ்வின், ஆர் பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India vs West Indies T20 series Indian team announced


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->