இலக்கு நிர்ணயம் செய்த இந்தியா.. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணியானது ஆரோன் பிஞ்ச் தலைமையில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விலடவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்திய அணி விராட்கோலியன் தலைமையில் இம்மாதத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 2 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 2 - 1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியது. 

இந்த நம்பிக்கையுடன் இந்திய அணி இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரையில் உலககோப்பைக்கு பின்னர் களம்காணும் முதல் போட்டியாக இது இருக்கிறது. மேலும், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து போட்டிக்கு எதிரான தொடரினை வெற்றிபெற்ற உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய அணி களம்கண்டு வருகிறது. இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை உருவாகியுள்ளது. 

இன்றைய போட்டியில் இந்திய அணியின் சார்பாக ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரிசப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது சாமி, பும்ரா ஆகியோரும் விளையாடுகின்றனர். 

ஆஸ்திரேலிய அணியின் சார்பாக டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மரன்ஸ் லபுஸ்சாக்னே, ஸ்டீவன் ஸ்மித், அஷ்டின் டர்னர், அலெக்ஸ் காரே, அஸ்டோன் அகர், பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா  ஆகியோர் விளையாடுகின்றனர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளது. 

இதன் மூலமாக இந்திய பேட்டிங் செய்து வந்த நிலையில், துவக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் - ஷிகர் தவானும் களமிறங்கினர். இவர்கள் இருவரும் சேர்ந்து அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த நிலையில், ரோஹித் சர்மா எதிர்பாராத விதமாக 4.3 ஓவரின் முடிவில் இரண்டு பவுண்டரிகள் அடித்து மொத்தமாக 15 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ரன்னவுட்டானர். 

ரோஹித் சர்மா அவுட்டானதும், லோகேஷ் ராகுல் களமிறங்கியுள்ளார். ரோஹித் சர்மா - ஷிகர் தவான் கூட்டணி அதிரடியாக ஆடி அணிகளுக்கு ரன்களை சேர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ரோஹித் அவுட்டானது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்திய அணி 10 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்து விளையாடி வந்தது.

பின்னர் களமிறங்கிய லோகேஷ் ராகுல் - ஷிகர் தவான் கூட்டணி நின்று ஆடியதை அடுத்து அணிக்கு ரன்கள் மளமளவென வந்தது. இருப்பினும் லோகேஷ் ராகுல் 27.1 ஓவரில் 61 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்த பின்னர் துவக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி வந்த ஷிகர் தவான் 91 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதற்கு பின்னர் களமிறங்கிய விராட் கோலி 16 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவே, ஷ்ரேயஸ் ஐயர் ஒன்பது பந்துகளில் 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய வீரர்கள் நின்று அடிப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், ரவீந்திர ஜடேஜா 32 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரிஷப் பண்ட் 33 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

ஷரத்துல் தாகூர் நிதானமாக ஆடிய நிலையில், 10 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவே, இறுதியாக முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி விளையாடி வந்து கொண்டு இருந்தனர். இந்திய அணியானது 46 ஓவர்களின் முடிவில் 234 ரன்கள் எடுத்து 8 விக்கெட் இழந்திருந்தது. துவக்கத்தில் நல்ல அதிரடியை ரசிகர்கள் ரசித்த நிலையில், இறுதியில் வரும் போது அடுத்தடுத்த விக்கெட் பறிபோனதால் சிறிது சோகத்திலும் இருந்து வந்தனர். 

இறுதியாக விளையாடி வந்த முகமது சபி 15 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 15 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.. பும்ரா இறுதியாக இறக்கப்பட்டு வெறுமையுடன் திரும்பியனார். இந்தியா 49.1 ஓவர்களின் முடிவில் 255 ரன்கள் எடுத்து இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி துவக்கியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

india vs aus match cricket aus takes bating shortly


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->