இந்தியா அபார ரன் குவிப்பு! ஸ்ரேயாஸ் கன்னி சதம் விளாச, சிக்ஸர் மழை பொழிந்த ராகுல்!  - Seithipunal
Seithipunal


இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியானது இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் காயமடைந்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஷிகர் தவான் ஆகிய இருவருக்கும் பதிலாக அறிமுக வீரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். 

சுமாரான தொடக்கத்தினை கொடுத்த இந்த அறிமுக ஜோடி 50 ரன்களை கடந்த பிறகு அடுத்தடுத்த ஓவர்களில் பிரிந்தது. 21 பந்துகளில் 3 பவுண்டரி அடித்த ப்ரித்வி ஷா 20 ரன்களுடனும் 31 பந்துகளில் 6  பவுண்டரி அடித்த 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்கள். அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 54 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு களமிறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் நிதானமாக ஆடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். 100 ரன்களுக்கு மேல் சென்ற இந்த பார்ட்னர்ஷிப், அணி 156 ரன்களை எடுத்த போது பிரிந்தது. விராட் கோலி அரை சதம் அடித்த திருப்தியுடன் அவர் 63 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆறு பவுண்டரிகளை எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன் பிறகு வந்த லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாட மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 101 பந்துகளில் சதம் அடித்தார். சதமடித்த சிறிது நேரத்தில் 107 பந்துகளில் 11 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 103 ரன்கள் எடுத்து சவுதி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஜாதவ் சில பவுண்டரிகளை விளாச இந்திய அணி 350 ரன்களை நோக்கி சென்றது. அதிரடியாக விளையாடிய லோகேஷ் ராகுல் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்சர்கள் 88 ரன்கள் குவித்து இந்திய அணி வலுவான இலக்கை அடைய காரணமாக இருந்தார். ஜாதவ் 15 பந்தில் 26 ரன்களை அடித்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்களை குவித்துள்ளது. 

நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிக்கனமாக பந்து வீசினார்கள். சவுதி 2 விக்கெட்டுகளையும் சோதி, கோலின் கிரந்தோமே தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.  நியூசிலாந்து அணிக்கு 348 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india set 348 target to new zealand in first ODi


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal