இந்தியா கண்டெடுத்த இறுதியாட்ட ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த டைட்டஸ் சாது!  - Seithipunal
Seithipunal


சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தங்க பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறது. இது இந்தியாவிற்கு கிடைத்த இரண்டாவது தங்கமாகும்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணி முதல் முயற்சியிலேயே தங்க பதக்கத்தை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. 

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா ஸ்ரீலங்கா அணிகள் மோதியது. முதலில் ஆடிய இந்திய அணி 116 ரன்கள் மட்டுமே எடுத்தது.117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியை இந்திய வீராங்கனை டைட்டஸ் சாது நிலைகுலைய செய்தார். 

அவர் முதல் ஓவரை மெய்டனாக வீசி இரண்டு விக்கெட்டையும், இரண்டாவது ஓவரில் ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும், மூன்றாவது ஓவரில் இரண்டு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தும் சிறப்பாக வீசினார். நான்கு ஓவரில் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். 

இவர் இந்திய அணிக்காக ஆடும் இரண்டாவது போட்டிதான் இது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். 18 வயதே ஆன இவருக்கு எப்படி பைனலில் ஆட இடம் கிடைத்தது என அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்கலாம். 

எல்லா அணியிலும் இறுதி ஓவருக்கு தான் ஸ்பெஷலிஸ்ட் இருப்பார்கள். ஆனால் இந்தியா மட்டும் தான் இறுதி ஆட்டத்துக்கான ஸ்பெஷலிஸ்டை உருவாக்கியிருக்கிறது. அப்படிதான் டைட்டஸ் சாதுவை சொல்ல வேண்டும். 

அப்படிதான் அவருடைய வரலாறு இருக்கிறது. இந்த வருடம் தொடக்கத்தில் நடைபெற்ற U19 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்காக ஆடியவர் தான் இவர். அப்போதைய பைனலிலும் 4 ஓவர்களை வீசிய டைட்டஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கஞ்சத்தனமாக 6 ரன்களை மட்டுமே வழங்கியிருந்தார். 

ஆக இரண்டு பைனலிலும் 8 ஓவர்களை வீசி 12 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆக வழி அமைத்துக் கொடுத்திருக்கிறார். இப்பொது சொல்லுங்கள் அவர் இறுதி ஆட்டத்துக்கான ஸ்பெஷலிஸ்ட் தானே! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india find Final specialist player titas sadhu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->