நாளை போட்டி நடக்க இருக்கும் நிலையில் இந்திய அணிக்கு அதிர்ச்சி செய்தி!  - Seithipunal
Seithipunal


இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் ஆனது, நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டிக்கான பயிற்சியின் போது விராட் கோலியின் விரலில் அடிப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் இடது கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்திய அணியின் வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போது நடந்துள்ளது. அடிபட்ட உடன், உடனடியாக விராட் கோலி வலி நிவாரணி ஸ்ப்ரேவை எடுத்து அடித்துக் கொண்டிருந்ததார்.

அதை பார்த்த இந்திய அணியின் பிசியோ நிதின் படேல் விரைவாக களத்திற்கு விரைந்து விராட் கோலிக்கு உதவினார். நாளை போட்டி நடக்க உள்ள நிலையில், கோலிக்கு அடிப்பட்டுள்ளதால், அவர் நாளைய போட்டியில் களமிறங்குவாரா என அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Captain Virat Kohli Injured


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal