இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்.! ஓராண்டு தடைக்கு பிறகு களமிறங்கும் வீரர்.! - Seithipunal
Seithipunal


இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இலங்கைக்கு எதிரான தொடரில் ஓய்வில் இருந்த ரோகித் சர்மா தற்போது அணிக்கு திரும்பிஉள்ளார். இன்றைய போட்டியில் ரோகித் சர்மாவுடன் யார் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

பும்ரா, ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட இந்திய பந்து வீச்சாளர்கள் நல்ல பார்மில் இருப்பதால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்கக்ப்படுகிறது.

அதே போன்று பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைக்கு பிறகு ஆஸ்திரேலியா வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி உள்ளதால் அந்த அணியின் பேட்டிங் பலமானது கூடியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட், சாம்பா உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் இந்திய அணி வீரர்களுக்கு சவாலாக இருப்பார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india australia match today


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal