அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணி: வீரார்கள் விபரம் உள்ளே..! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 05 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.  அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக 02 டெஸ்ட் (4 நாட்கள்) போட்டிகளிலும், இந்திய அணிக்கெதிராக ஒரு போட்டியிலும் விளையாடவுள்ளது. இந்த தொடர் மே 30-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

அதன்படி, 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும்.  இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான அந்த அணியில் ஜெய்ஸ்வால், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ருதுராஜ் கெய்க்வாட் ஹர்ஷித் ராணா ஆகிய முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அணி விபரம்:

அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாகூர், இஷான் கிஷன், மானவ் சுதர், தனுஷ் கோட்டியான், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே. சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் 2-வது போட்டியின்போது அணியுடன் இணைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India A team to tour England under Abhimanyu Easwaran Player details inside


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->