இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி.. ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி.! - Seithipunal
Seithipunal


இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹார்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடியது.

இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs SL 3rd ODI match today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->