சிக்ஸ்... போர்... ரிபீட்டு...இரட்டை சதம்! ரன் மிஷின் ஜெய்ஸ்வால் சாதனை!! - Seithipunal
Seithipunal


உலக கிரிக்கெட் வரலாறில் ஒரு சிலர்  மட்டுமே அறிமுகமான உடனே சர்வேதேச அளவில் புகழ்  பெறுவார்கள். அந்த வரிசையில் இப்போது  இடம் பெற்று இருப்பவர் யஷ் ஹாசி ஜெய்ஸ்வால்.  இந்த பெயர் தான் இன்று உலக கிரிக்கெட் அரங்கில்  ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருகிறது. 22  வயதே ஆன இவர் கிரீஸில்  சிங்கம் போல நிற்பதை பார்த்தால், வேகப்பந்து வீச்சாளர் முதல் சுழற் பந்து வீச்சாளர் வரை நடுக்கத்தை  ஏற்படுத்தும்.  கரணம், தயவு தாட்சணையின்றி பந்தை எதிர்கொண்ட வேகத்திலேயே எல்லைக்கோட்டிக்கு வெளியே அனுப்புவார். இவருக்கு டெஸ்ட், ஒன்டே, t20 என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அனைத்து போட்டிகளுக்கும் ஒரே பார்முலாதான்... அதாவது சிக்ஸ், போரு ரிபீட்டு...

விசாகப்பட்டினதில் நேற்று தொடங்கிய இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட்  போட்டியில் ஒருமுனையில் சீட்டு கட்டு போல் விக்கட்டுகள் மளமளவென சரித்து கொண்டிருக்க, மறு முனையில் ஜெய்ஸ்வால்,  சிக்ஸர் பவுன்டரிகலால்  இங்கிலாந்து அணி வீரர்களுக்கு பீல்டிங்  பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார். 


 

இந்தியா அனைத்து விக்கட்டுகளும் இழந்து  இந்தியா 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  191 ரன்கள் எடுத்திருந்த போது, எந்த பயமுமின்றி   சோயப் பஷீர் பந்தில் சிக்ஸ் மற்றும் பவுண்டரியை அடுத்தடுத்த பந்துகளில் விளாசி இரட்டை சதத்தை பதிவு செய்தார்.  17 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் இடதுகை பேட்ஸ்மேன் ஒருவர் இரட்டை சதம் அடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இளம் இந்திய வீரர்  என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.

சரி யார் இந்த ஜெய்ஸ்வால்? உத்தரபிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தில் உள்ள சூரியவான் கிராமத்தில் 28 டிசம்பர் 2001 ஆம் ஆண்டு ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். அவரது  தந்தை ஒரு சிறிய ஹார்ட்வர் கடை நடத்தி வந்தார்.உடன் பிறந்தவர்கள் 6 பேர், வறுமையின் பிடியில் இருந்து தப்பிக்க இவர் மட்டும் விதிவிலக்கா என்ன?

எதைப்பற்றியும் கவலைப்படாமல், தனது 11 வயதில் மும்பைக்கு சென்று கிரிக்கெட் இவ்விளையாட தொடங்கினார். இவர் சென்ற உடனே அங்கு யாரும் சிவப்பு கம்பளம் விரித்து இவரை வரவேற்கவில்லை. மாமாவை நம்பி சென்ற இவருக்கு  அவர்களின்  வீட்டை பார்த்ததுமே அங்கு இருக்க தோன்றவில்லை.  பின்னர் கல்பாதேவி என்ற பால் பண்ணையில் தங்கும் வசதியோடு வேலை கிடைக்கவே சற்று மகிழ்ச்சியடைந்தார் ஜெய்ஸ்வால். ஆனால் அந்த வேலை  நீண்ட நாள் நீடிக்கவில்லை. திருப்பவும் தங்குவதற்கு பிரச்சனை ஏற்பட்டது. தனது 

ஒரு வழியாக அலைந்து திரிந்து  மும்பை ஆசாத் மைதானத்தில் உள்ள முஸ்லிம் யுனைடெட் கிளப் கூடாரத்தில் ஜெய்ஸ்வால் தஞ்சமடைந்தார். பகல் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டு, இரவில் உணவு சமைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.  அப்பா அடிக்கடி பணம் அனுப்பினாலும், மும்பை நகரில் வசிக்க அது போதுமானதாக இல்லை. 

ஒரு கட்டத்தில் ஜெய்ஸ்வால் பாணி பூரி விற்று தனது  அன்றாட வாழ்க்கையை  ஓட்டினார். மூன்று  வருட போராட்டத்திற்கு பின் ஜ்வாலா சிங் என்ற பயிச்சியாளர் இவரின் திறமையை கண்டுபிடித்து பயிற்சியளித்து,  ஜெய்ஸ்வால்  பல போட்டிகளில் பங்கேற்க வைத்தார். அதன் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் மேம்படத் தொடங்கியது.  அன்றில் இருந்து இவரின்  கிரிக்கெட் வாழ்க்கை ஜெட் வேகத்தில் பயணிக்க தொடங்கியது. 

2015ல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் கில்ஸ் ஷீல்ட் போட்டியில் 319 ரன்கள் விளாசி  லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். ஜெய்ஸ்வால் தொடர்ந்து சிறப்பாக ஆடி  2018 ACC அண்டர்-19 ஆசிய கோப்பை அணியில் தேர்வானார் . அந்த போட்டியில் இந்தியா வென்றதோடு, ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி அனைத்து உள்ளூர் போட்டிகளிளும்   சிறப்பா விளையாடி  19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.

 இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்தொகொண்ட இவர்  அரையிறுதியில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் . இதனால் அப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது 

2020 ஐபிஎல் ஏலத்தில் இவரது  அடிப்படை விலையை விட 12 மடங்கு அதிகம் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ஸ்வாலை ரூ 2.4 கோடிக்கு வாங்கியது அனைவரின் புருவதையும் அப்போது உயர்த்தியது.  2023 ஐ.பி.எல்லில் 625 ரன்கள் குவித்து தந்து திறமையை நிரூபித்தார்.  ஜெய்ஸ்வால் அச்சமின்றி விளையாடுவதை பார்த்தபோது, இவர் நிச்சயம் இந்திய அணிக்கு ஒருநாள் விளையாடுவர் என்று ஆருடம் கூறப்பட்டது.  அது நடக்க வெகு நாட்கள் ஜெய்ஸ்வாலுக்கு தேவைப்படவில்லை. 

2023 ல்  நடைபெற்ற  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அறிமுக  டெஸ்ட் போட்டியில்   143 ரன்கள் எடுத்து முதல் போட்டியிலே ஓவர்சீஸில் சதமடித்த முதல் இந்தியத் தொடக்க வீரர் என்ற பெருமையை பெற்றார்.  இவர் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சாதித்து வருகிறார். 

வறுமையை கண்டு பயந்து விடாதே... கிரிக்கெட் இருக்கு மறந்து விடாதே... என்பது தான் இவரது தாரக மந்திரம்.  கடின உழைப்பும் திறமையும்  இருந்தால் வறுமையை விரட்டி விடலாம் என்பதற்கு 22 வயதே ஆன ஜெய்ஸ்வால் ஒரு சான்றாக இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs ENG test match 2024 Yashasvi Jaiswal double century


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->