முதல் போட்டியிலேயே தோல்வி.. சோகத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், 3 ஒருநாள் தொடர், 3 டி20 தொடர், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியோடு தொடங்க வேண்டும் என இந்திய அணி களமிறங்கியுள்ளது. சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டுமென ஆஸ்திரேலியாவும் துடிப்புடன் களத்தில் இறங்குகிறது. இதனால், முதல் போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன், பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக எஸ் தவான், எம் அகர்வால், வி கோஹ்லி, எஸ் ஐயர், கே.எல்.ராகுல், எச் பாண்ட்யா, ஆர் ஜடேஜா, எம் ஷமி, ஒய் சாஹல், என் சைனி, ஜே பும்ரா ஆகியோர் விளையாடினர்.

ஆஸ்திரேலிய அணியின் சார்பாக எ பிஞ்ச், டி வார்னர், எஸ் ஸ்மித், எம் ஸ்டோய்னிஸ், எம் லாபுசாக்னே, ஜி மேக்ஸ்வெல், எ கேரி, பி கம்மின்ஸ், எம் ஸ்டார்க், எ ஜாம்பா, ஜே ஹேசில்வுட் ஆகியோர் களமிறங்கினர். துவக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி ரன்களை குவித்து தள்ளியது. 

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 76 பந்துகளில் 69 ரன்களும், ஆரோன் ஸ்பின்ச் 124 பந்துகளில் 114 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 66 பந்துகளில் 105 ரன்களும் எடுத்தனர். ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்திருந்தனர். 

இதனையடுத்து 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சொதப்பல் ஆட்டத்தால் தோல்வியை தழுவியது. களமிறங்கிய அனைவரும் நின்று ஆடினாலும், அவர்களால் வெற்றிக்கு தேவையான ரன்களை குவிக்க முடியவில்லை. இதனால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 308 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 

அதிகபட்சமாக ஷிகர் தவான் 74 ரன்களும், பாண்டியா 90 ரன்களும், நவதீப் ஷைனி 29 ரன்களும் எடுத்திருந்தனர். பிற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுடன் வெளியேறினார். இதனால் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND Vs AUS Match India Loss 27 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->