இந்தியா - ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.. தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? - Seithipunal
Seithipunal


இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

தொடரை கைப்பற்றுமா இந்திய அணி

இதில், முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

அந்த வகையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி இன்று (மார்ச் 9-13) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இருநாட்டு பிரதமர்கள் பங்கேற்பு

இந்த நிலையில்  இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய பிரதமர் மோடியும் - ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ்வும் நேரில் காண உள்ளதால் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ் போடும் பிரதமர் மோடி

இந்த நிலையில் நாளை தொடங்க புள்ள கடைசி போட்டியை இந்திய பிரதமர் மோடி டாஸ் போட்டு தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி

ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஏற்கனேவே, ஆஸ்திரேலியா அணி முன்னேறியுள்ள நிலையில், இந்திய அணி தகுதிபெற நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டும்.

இந்திய அணியில் மாற்றம்?

ஆஸ்திரேலிய அணிக்கு  எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் கே எஸ் பரத்துக்கு பதிலாக விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வேக பந்துவீச்சாளர் முகமது சிராஜூக்கு ஓய்வளிக்கப்பட்டு முகமது ஷமி களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

எதிர்பார்க்கப்படும் அணி விவரம்

இந்திய அணி

ரோஹித் சர்மா (கே), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (விகீ)/இஷான் கிஷான், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி/முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

ஆஸ்திரேலியா அணி :

உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (கே), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (வி.கீ), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், டாட் மர்பி, மேத்யூ குஹ்னெமன்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS 4th Test match today starts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->