INDvsAUS : DAY2 .. முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்திய அணி.. ஜடேஜா, அக்சர் படேல் அபார பேட்டிங்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ( பிப்ரவரி 9 - 13) நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த  ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களும், ஷமி மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 77 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 56 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் ரன்கள் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் பெரிய பார்ட்னர்ஷிப் எதுவும் அமைக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதன்படி, இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  விராட் கோலி 12 ரன்களிலும், அறிமுக வீரராக களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் 8 ரன்களிலும் வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 9வது சதத்தை பதிவு செய்த நிலையில் 120 ரன்களுக்கு அவுட்டானார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா - அக்சர் படேல் ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது. இருவரும் அரைசதம் அடித்த நிலையில் 7வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்துள்ளது. இறுதியாக இன்றைய 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்துள்ளது.

இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜடேஜா 66 ரன்களுடனும், அக்சர் படேல் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS 1st test match Day 2 Stumps


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->