“நான் மீண்டு வருகிறேன்” -ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஷ்ரேயாஸ் ஐயர்...!
Im coming back Shreyas Iyer thanks fans
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபாரமான 9 விக்கெட் வெற்றியைப் பதிவு செய்து தொடரை கைப்பற்றியது.அந்த ஆட்டத்தின் போது, இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென காயம் அடைந்து விளையாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

மருத்துவ பரிசோதனையில், அவரது இடது பக்க விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உறுதிப்படுத்தியது.அதனைத் தொடர்ந்து, ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சையளித்ததன் விளைவாக, தற்போது அவரது உடல்நிலை மிகவும் மேம்பட்டு, சாதாரண வார்டுக்குக் மாற்றப்பட்டுள்ளார்.மருத்துவமனை தரப்பில், “அவரது நிலைமை நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்பில் வைத்திருக்கப்படுவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரசிகர்களின் அக்கறைக்கு பதிலளிக்கும் வகையில், ஷ்ரேயாஸ் ஐயர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் ஒரு உணர்ச்சிமிகு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,“நான் தற்போது குணமடைந்து வருகிறேன். எனக்காக பிரார்த்தித்து வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எனக்குப் பெரும் ஊக்கமாக உள்ளது. என்னை நினைவில் வைத்திருந்ததற்கு உண்மையிலே நன்றி"என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Im coming back Shreyas Iyer thanks fans