அன்று டெலிவரி பாய்! இன்று மேன் ஆஃப் தி மேட்ச்! ரசிகர்களை சிலிர்க்க வைத்த மீக்கெரன்! - Seithipunal
Seithipunal


ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் 28-ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக 87 ரன்கள் வித்தியாசத்தில் நெதா்லாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

கொல்கத்தா ஈடன் காா்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற நெதா்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் விக்ரம்ஜித் சிங் 3 ரன்னுக்கும், மேக்ஸ் டௌவ்ட் டக் அவுட்டாகி வெளிறினர்.

அடுத்து களமிறங்கிய காலின் ஆக்கா்மேன் 15 ரன்னுக்கும், பாஸ் டீ லீட் 17 ரன்னுக்கும், ஷரிஸ் அகமது 6 ரன்னுக்கும், ஆா்யன் தத் 9 ரன்னுக்கும் ஆட்டமிழக்க, நெதளர்ந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வா்ட்ஸ் 6 பவுண்டரியுடன் 68 ரன்களை எடுத்து அசத்தினார்.

மேலும், வெஸ்லி பாரெஸி 8 பவுண்டரியுடன் 41 ரன்களையும், சைபிராண்ட் 35 ரன்களையும், லோகன் வேன் 23 ரன்களையும் எடுத்தனா்.

நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் நெதா்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 229 ரன்கள் எடுத்து.

இதனையடுத்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், நெதா்லாந்து அணி வீரர் பால் வேன் மீக்கெரனின் அசுர பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தது ஆட்டமிழந்து வெளியேறினர்.

42.2 ஓவா்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த வங்கதேச அணி, வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆட்டத்தையும், அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது. 

ஆட்டநாயகனாக அபாரமாக பந்துவீசிய நெதா்லாந்து வீரர் பால் வேன் மீக்கெரன் (4-23 விக்கெட்) தேர்வானார். 

இந்நிலையில், ஆட்டநாயகன் விருது வென்ற நெதா்லாந்து வீரர் பால் வேன் மீக்கெரன் குறித்து வெளியான ஒரு செய்தி, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் 'உபர் ஈட்ஸ்' நிறுவனத்தின் டெலிவரி பாயாக பால் வேன் மீக்கெரன் பணிபுரிந்து உள்ளார் என்ற அந்த தகவல், தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

மேலும், ஒரு உணவு டெலிவரி ஊழியராக பணிபுரிந்தவர், இன்று ஒரு ஆட்டத்தின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அவரை பாராட்டியும் வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC World Cup 2023 ire Paul van Meekeren


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->