ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியல்.. முதல் இரண்டு இடங்களை தட்டி சென்ற இந்திய வீரர்கள்.!! - Seithipunal
Seithipunal


ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதன்படி, பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே 892 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 845 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்  844 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இருந்த ஜோ ரூட் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 754 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், விராட்கோலி 742 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும், ரிஷப் பண்ட் 738 புள்ளிகளுடன் 11வது இடத்திலும் உள்ளார். 

பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 901 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 850 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். தென்ஆப்பிரிக்கா வீரர் ரபாடா 835 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்தியனின் வீரர் பும்ரா 830 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.


ஆல்-ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா 385 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 341 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் 336 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இருந்த ஜேசன் ஹோல்டர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ICC Test All Rounder Rankings


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->