02-வது முறையாக ODI தொடரில் தோல்விக்கு முக்கிய காரணமே அவர் தான்..! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வானதுக்கு பின்னர் இந்திய அணி 02-வது முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் படு தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே, இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா மண்ணில் நடக்கும் ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. 

இன்று நடந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸி., அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். கில் 09 ரன்னில் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோஹ்லியும் 04 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். பின்னர் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவும், ஸ்ரேயாஸ் ஐயரும் ரன்களை சேர்த்தனர். அதில் ரோகித் 73 ரன்களும், ஸ்ரேயாஸ் 61, அக்சர் படேல் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த கேஎல் ராகுல் 11, வாஷிங்டன் சுந்தர் 12, நிதிஷ்குமார் ரெட்டி 08, அர்ஷ்தீப் சிங் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய அணி 50 ஓவரில் 09 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. இறுதியில் ஹர்ஷித் ராணா 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

265 என்ற இலகு இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி  கேப்டன் மிச்சல் மார்ஷ் 11, டிராவிஸ் ஹெட் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மாத்யூ ஷார்ட் 78 ரன்கள் எடுத்தார். பின்னர் நிதானமாக ஆடிய ஆஸி., அணியில், மாட் ரென் ஷா 30, அலெக்ஸ் காரே 09 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மிச்சல் ஓவன் 36, சேவியர் பார்லெட் 03, மிச்சல் ஸ்டார்க் 04 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து, கூப்பர் கோனோலே 61 ரன்கள் எடுக்க அந்த அணி 46.2 ஓவரில் 08 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 02 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. 03-வது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் ( அக்டோபர் 25) நடைபெறவுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது. இன்று அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற 02-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 02 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

07 மாதங்களுக்கு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியா மண்ணில் நடந்து வரும் ஒருநாள் தொடரை 2-0 என்ற இழந்திருப்பது ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக, இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணியின் சீனியர் வீரர்கள் பலரும் ஓய்வில் இருக்கின்றனர். ஆனால், இந்திய அணி முழு படையுடன் சென்றும் தோல்வி அடைந்துள்ளது. இதனால், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

ஏற்கனவே பயிற்சியாளரான பின் முதல்முறையாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த போதும் இந்திய அணி ஒருநாள் தொடரை இலங்கை அணியிடம் இழந்தது. பின்னர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வென்று ஆறுதல் அளித்தாலும், மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்திருக்கிறது.

இந்நிலையில், அடுத்தடுத்து கம்பீர் தலைமையிலான ஒருநாள் அணி, தொடர்களில் சொதப்புவது பல்வேறு விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரு தொடர்களிலும் ரோகித், விராட், ராகுல் போன்ற சீனியர் வீரர்களும் உள்ளனர்.

சுப்மன் கில் புதிய கேப்டனாக இருந்தாலும், சீனியர்கள் விளையாடி இருக்கின்றனர். இதனால் கம்பீர் அணித் தேர்வில் செய்த சொதப்பல்கள் மற்றும் ஹர்சித் ராணாவுக்கு வழங்கப்படும் தொடர் வாய்ப்புக்கள், நம்பர் 01 ஆல்ரவுண்டர் ஜடேஜாவை கழட்டிவிடவும் செய்த திட்டங்களே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

He is the main reason for the defeat in the ODI series for the 2nd time


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->