கிராண்ட் சுவிஸ் செஸ் அரங்கில்...முதல் சுற்றிலேயே மிரட்டிய குகேஷ்...!
Grand Swiss Chess Arena Kukesh win first round
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் ‘பிடே கிராண்ட் சுவிஸ்’ சர்வதேச சதுரங்கப் போட்டி 11 சுற்றுகளுடன் ஓபன் மற்றும் மகளிர் பிரிவாக நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வீரர்/வீராங்கனைகள் அடுத்த ஆண்டு நடைபெறும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறுவர்.

இந்த முதல் சுற்று ஆட்டத்தில், உலக சாம்பியனும் தமிழக வீரருமான குகேஷ், கருப்பு காய்களுடன் விளையாடி, பிரான்சின் எடினி பாக்ரோட்டை 45-வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தார்.
அதே போல், மற்றொரு தமிழக நட்சத்திரம் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஜெப்ரி ஜியோங்குடன் 31-வது நகர்த்தலில் டிரா செய்தார்.மேலும், மகளிர் பிரிவில், தமிழகத்தின் ஆர். வைஷாலி, உஸ்பெகிஸ்தானின் குல்ருக்பெகிமை 56-வது நகர்த்தலில் வெற்றி கொண்டார்.
அதேபோல், இந்தியாவின் வந்திகா அகர்வால், உக்ரைன் வீராங்கனை யூலியா ஒஸ்மாக்கை தோற்கடித்தார். இந்தியாவின் ஹரிகா மற்றும் இஸ்ரேலின் மார்செல் எப்ரோம்ஸ்கி இடையேயான ஆட்டம் டிராவாக முடிந்தது.
English Summary
Grand Swiss Chess Arena Kukesh win first round