இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்.! வாஷ் அவுட் செய்து அசத்திய ரவிக்குமார்.! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் மல்யுத்த போட்டிகள் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

57 கிலோ எடை பிரிவில் பத்துக்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் ரவிக்குமார் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும் சில காமன்வெல்த் போட்டி செய்திகள் :  இன்று ஆண்களுக்கான லான் பவுல் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில்,  இந்தியா அணியும், வடக்கு அயர்லாந்து அணியும் பலப்பரீட்சை செய்தன.

ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய வடக்கு அயர்லாந்து அணி 18-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 


மகளிர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது. இதன் மூலம் இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தையும் உறுதி செய்துள்ளது. இறுதிப் போட்டி நாளை (ஆக. 7) எட்ஜ்பாட்ஸனில் நடைபெற உள்ளது. 

காமன்வெல்த் போட்டியில் 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

காமன்வெல்த் பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி பெற்றுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GOLD RaviKumarDahiya CommonwealthGames


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->