ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய பிரபல வீரர்.. பின்னடைவை சந்திக்க போகும் முன்னணி அணி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!  - Seithipunal
Seithipunal


ருகின்ற ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியிருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளின் வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் பிரபல வீரர்கள் பலரும் காயத்தினால் போட்டிகளில் இருந்து விலகி வருகின்றனர்.

அந்தவகையில் ராஜஸ்தான் அணியின் மிகமுக்கிய பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தின் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் தற்போது பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டர் ஆக இருப்பவர் கிளென் மேக்ஸ்வெல் இவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதால் ஐபிஎல்லில் ஆரம்ப போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முழங்கையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக கிளென் மேக்ஸ்வெலுக்கு ஆப்பரேஷன் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே சுமார் ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை இவர் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவில் இருந்தும் இவர் விலகினார்.

மேலும், எட்டு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் பாதிக்கும் மேலான ஐபிஎல் போட்டிகளில் இவர் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். இவரின் பங்கேற்பு இல்லாத பஞ்சாப் அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். பஞ்சாப் அணிக்காக சுமார் 10.5 கோடி கொடுத்து ஏலம் எடுத்து வைத்திருப்பதாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

glenn maxwell not plays in ipl because of injury


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->