ஐசிசி தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஜெப் அலர்டிஸ் திடீர் ராஜினாமா..!
Geoff Allardice resigns from the post of ICC Chief Executive Officer
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 09-வது சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 09-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இதில் 08 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலர்டிஸ் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை அதிகாரியாக செயல்பட்டது எனக்கு பெருமை அளிக்கிறது. என்னால் முடிந்தவரை இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரமாக இருக்கும் என்று கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இவர் 2021 நவம்பர் மாதம் ஐசிசி தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
English Summary
Geoff Allardice resigns from the post of ICC Chief Executive Officer