உங்களை விட நாங்கள் தான் டாப்! வம்பிக்கிழுக்கும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்! - Seithipunal
Seithipunal


ஆஷஸ் டெஸ்ட் தொடரை விட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிகளைத் தான் அதிக ரசிகர்கள் பார்க்கிறார்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். 

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் ஆஷஸ் தொடரை விட இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை தான் அதிக ரசிகர்கள் விரும்பி மகிழ்ச்சியுடன் பார்க்கின்றனர். இந்த இரு நாடுகளிடையேயான போட்டிகள் அடிக்கடி நடைபெற வேண்டும். அதற்கு ஆசிய கோப்பை போட்டி மட்டுமில்லாமல் இரு நாடுகளுக்கிடையேயான தொடர்களை மீண்டும் நடத்த இரு நாட்டு அரசுகளும் முன்வர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் அவர் எங்களுடைய காலகட்டத்தில் ஆசிய கோப்பை தொடர் மிகவும் விறுவிறுப்பான தொடராக இருந்ததுடன், அந்த அணியின் வீரர்கள் தங்கள் முழு பலத்தையும் காட்ட முயற்சி செய்வார்கள். இது போன்ற நிறைய போட்டியில் விளையாடும் போது வீரர்களின் திறமை மேலும் மெருகேறும்.

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பாகிஸ்தான் வீரர்கள் தங்களுடைய முழுத்திறமையையும் வெளிப்படுத்தி அந்த போட்டிக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பதை போட்டியின்போது பார்க்க முடியும். அது ரசிகர்களை உற்சாகமாக வைத்திருக்கும் எனவே இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். 

ஆஸ்திரேலிய, இங்கிலாந்து ரசிகர்கள், ஊடகங்கள் எப்போதும் ஆசிய அணிகளின் வீரர்களை சீண்டுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களையே இன்சமாம் சீண்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Pakistan Captain insamam said more viewers to India Pakistan match compared with ashes


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->