உலகக் கோப்பை கால்பந்து : மெஸ்ஸியின் அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம்.. பிரேசில் அவுட்.! - Seithipunal
Seithipunal


2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர்.

அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

அதன்படி, நெதர்லாந்து, செனகல், அர்ஜென்டினா, போலந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், மொராக்கோ, குரோஷியா, பிரேசில், சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், தென் கொரியா ஆகிய 16 அணிகள் 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாக் அவுட் சுற்று போட்டியில் இருந்து காலிறுதி போட்டிக்கு நெதர்லாந்து, குரோஷியா, பிரேசில், அர்ஜெண்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோ ஆகிய 8 நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து காலிறுதி போட்டிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

இதில், நேற்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் குரோஷியா – பிரேசில்  அணிகள் மோதின. முதல் 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து பெனால்டி ஹுட் அவுட் முறையில் குரேஷியா அணி 4-2 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது கால் இறுதி போட்டியில் நெதர்லாந்து – அர்ஜெண்டினா அணிகள் மோதின. இதில் 90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கப்படவில்லை.

இதனையடுத்து பெனால்டி ஹுட் அவுட் முறையில் அர்ஜென்டினா அணி 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து டிசம்பர் 14ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா குரேஷியா அணிகள் மோதுகின்றன.

இன்று நடைபெறும் காலிறுதி போட்டிகளின் நிலவரம்;

மொரோக்கோ – போர்ச்சுக்கல் (நவம்பர் 10 இரவு 8.30 மணிக்கு)

இங்கிலாந்து – பிரான்ஸ் (நவம்பர் 11 இரவு 12.30 மணிக்கு)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

FIFA World Cup 2022 quarter final results


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->