சஞ்சு சஞ்சு என முழங்கிய ரசிகர்கள்.. இந்திய அணியின் பயிற்சியில் நடந்த சுவாரஸ்ய தருணங்கள்!
Fans chanted Sanju Sanju Interesting moments from the Indian team training
17-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரை முன்னிட்டு இந்திய அணி வீரர்கள் துபாயில் உள்ள ஐசிசி மைதானத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர்.
பயிற்சி முடிந்து வீரர்கள் மைதானத்திலிருந்து வெளியே வந்தபோது ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தில் இருந்தது. அப்போது சஞ்சு சாம்சன் ரசிகர்கள் “சஞ்சு… சஞ்சு…” என முழக்கமிட்டனர். இதனை கேட்டு சூர்யகுமார் யாதவ் நகைச்சுவையாக சஞ்சுவை “உள்ளூர் பையன்” என்று அழைத்தார். உடனே சஞ்சு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து, ஆட்டோகிராப் வழங்கி மகிழ்ச்சி கொடுத்தார்.
ஆனால் அதே நேரத்தில் அங்கு வந்த சுப்மன் கில் ரசிகர்களை கவனிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, கில்லுக்கு எதிராக பல ரசிகர்கள் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த முறை ஆசிய கோப்பையில் சுப்மன் கில் – அபிஷேக் சர்மா தொடக்க ஜோடியாக களமிறங்க வாய்ப்பு அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா மிடில் ஆர்டரில் இடம்பெற வாய்ப்புள்ளது. இதனால், சஞ்சு சாம்சனுக்கு லெவனில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
English Summary
Fans chanted Sanju Sanju Interesting moments from the Indian team training