கார் விபத்தில் சிக்கியவரை மீட்க போராடிய பிரபல வேகப்பந்துவீச்சாளர்!
famous fast bowler save person involved car accident
உத்தரகண்டில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கியவரை அந்த வழியாக சென்ற நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி மீட்க உதவி செய்துள்ளார்.
உத்தரகாண்ட், நைனிடால் மலை பாதையில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது காருக்கு முன்னே சென்று கொண்டிருந்த கார் திடீரென சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது.
இதனை பார்த்த முகமது ஷமி மற்றும் சிலர் காருக்குள் சிக்கியிருந்தவரை மீட்க உதவி செய்தனர். மேலும் இது தொடர்பான வீடியோவை முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ''விபத்தில் சிக்கியவரை காப்பாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. அந்த நபர் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடவுள் அவருக்கு இரண்டாவது பிறப்பை கொடுத்துள்ளார்'' என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
famous fast bowler save person involved car accident