ஓய்வை அறிவித்தார் தென்னாபிரிக்காவின் பாப் டு பிளாசிஸ்! சென்னை சூப்பர் கிங்சில் விளையாடுவாரா?!  - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பாப் டு பிளாசிஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்து 20 ஓவர் மற்றும் 50 ஓவர் போட்டி ஆட்டங்களில் விளையாட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரராக இருந்து வருபவர் பாப் டு பிளாசிஸ். 37 வயதான இவர், தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடி கொண்டிருந்தார். இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவர் ஓய்வை அறிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 69 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் 36 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றி வந்தார். தென்னாபிரிக்க அணியின் கேப்டனாக இருந்த டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றதையடுத்து அவருக்கு பதிலாக பாப் டு பிளாசிஸ் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 

அவர் கேப்டனாக பொறுப்பேற்றது முதலே தென்னாபிரிக்க அணி வெற்றிகளை குவித்து வந்த நிலையில், முதல் 27 போட்டிகளில் 17 வெற்றிகளை பெற்றிருந்த பாப் டு பிளாசிஸ் அடுத்த 9 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று 8 போட்டிகளில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து 8 போட்டிகளில் தென் ஆபிரிக்க அணி தோல்வி அடைந்ததை அடுத்து, தென்னாபிரிக்க அணியின் கேப்டன் பொறுப்பை உதறித் தள்ளினார். அவர் கேப்டனாக செயல்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் அவருடைய சராசரி ஒருபோதும் 40 ரன்களுக்கு  கீழே இரங்கவில்லை. அந்த அளவில் அவர் சிறப்பாகவே செயல்பட்டார். 

கடைசியாக இந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி கடைசி நாளில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக இலங்கையில் நடைபெற்ற போட்டியில் ஒரு இன்னிங்சில் 199 ரன்கள் அடித்தது அவருடைய அதிகபட்ச ரன்களாக பதிவு ஆனது. ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டிய படி போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனவை காரணம் காட்டி, ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்கா செல்வதை ரத்து செய்து விட்டது. இதனால் ஆஸ்திரேலிய தொடருடன் ஓய்வு பெறுவதற்கு முடிவெடுத்திருந்த  பாப் டு பிளாசிஸ் அந்த தொடர் நடைபெறாததையடுத்து, அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், அடுத்ததாக இரண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற இருப்பதால் 20 ஓவர் போட்டிகள் மற்றும் 50 ஓவர் போட்டிகளில் அதிக அளவில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பாப் டு பிளாசிஸ் சர்வதேச அறிமுகமானது அருமையாக அமைந்தது. அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமைய சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. கடந்த 2012ஆம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பின்வரிசையில் களமிறங்கிய 4வது இன்னிங்சில் ஒன்றரை நாள் பேட்டிங் செய்து 376 பந்துகளில் 110 ரன்களை மட்டுமே அடித்து போட்டியை டிராவில் முடித்து கொடுத்தார். அவர் அந்த போட்டியின் முதல் இன்னிங்சிலும் 78 ரன்களை குவித்ததால் அவரே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற 20 ஓவர் போட்டித்தொடரான ஐபிஎல்லில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அவர் தொடர்ந்து விளையாடுவார் எனவும் தெரிகிறது. தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரும், பள்ளிக் காலத்திலிருந்தே மிகச்சிறந்த நண்பருமான டிவில்லியர்ஸின் பிறந்தநாளான இன்று ஓய்வை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Faf du plessis announced international test match retirement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal