யூடியூப் சேனலை தொடங்குவாரா தோனி? வைரலாகும் பதில்! - Seithipunal
Seithipunal


முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இவர் இந்தியாவுக்கு ஐசிசியின் முக்கியமான 3 உலகை கோப்பையை பெற்றுத் தந்துள்ளார். இதுவரை எந்த இந்திய கேப்டனாலும் இவரது சாதனைகளை முறியடிக்க முடியவில்லை. 

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பை சிஎஸ்கே அணி எம்.எஸ். தோனியின் தலைமையில் வெற்றி பெற்றது. தற்போது ஐபிஎல் மினி ஏலம் வருகின்ற 19ஆம் தேதி தொடங்க உள்ளது. 

அதில் சிஎஸ்கே அணியில் இருந்து 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் எம்.எஸ். தோனியிடம் யூடியூப் சேனலை தொடங்குவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு அவர், ''மிகவும் கடினம் என்பதால் என்னால் அதனை செய்ய முடியாது. கேமராவுக்கு கூச்சப்படுபவன் நான் கிடையாது. 

ஆனால் என்னால் செய்ய முடியாது. நேரடியாக பேசுவதற்கு மட்டுமே எனக்கு பிடிக்கும்.  யூடியூப் சேனலை என்னால் நடத்த முடியும் என தோன்றவில்லை. ஒரு நாட்களுக்கு 2,3 வீடியோக்களை பதிவிட்டு பின்னர் மறந்துவிடுவேன். 

இன்ஸ்டாகிராம் கணக்கினை போல் ஒரு வருடத்திற்கு காணாமல் போய்விடுவேன்'' என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dhoni start YouTube channel


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->