சீறி பாய்ந்த தோனி - வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில், 17 வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அதன் படி, சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணியும் சென்னை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ், ரச்சின் ரவீந்திர களம் இறங்கி முதல் ஓவரில் இருந்தே அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தனர். 

20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 206 ரன்கள் எடுத்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. ஆனால், குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 143 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதனால், சென்னை அணி சென்னை மண்ணில் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. 

இந்த ஆட்டத்தில் 42 வயதான தோனி பிடித்த ஒரு கேட்ச் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் அணியின் கேப்டன் கில் எட்டு ரன்களிலும் விதர்மன் சாகா 21 ரன்களிலும் ஆட்டம் இழக்க, மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் உள்ளிட்டோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் இன்று பந்து வீசினார். அப்போது விஜய் சங்கர் அடித்த பந்து ஸ்லிப்பை நோக்கி சென்றது. ஆனால், ஸ்லிப்பில் யாரும் இல்லை என்பதால், 42 வயதான தோனி திடீரென்று பாய்ந்து அந்த கேச்சை அபாரமாக பிடித்தார். இதனை பார்த்தவுடன் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni catch vedio viral in social medias


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->