சத்தமே இல்லாமல் 19 வயதே ஆன வீரரை கைப்பற்றிய பெங்களூர் அணி! உற்சாகமாக இருக்கும் ஆர்சிபி!  - Seithipunal
Seithipunal


கர்நாடகா அணிக்காக விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடி வரும் 19 வயதே ஆன இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் ஆர்சிபி அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த படிக்கல் என அனைவருமே கேட்கலாம். அவர் ஐபிஎல்க்கு புதியதா என்றால் அதுவும் இல்லை. 19 வயதே ஆன இவர் கடந்த ஆண்டு முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அதேபோல் ஆர்சிபி அணியும் அவரை ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால், 2019 சீசனில் ஒரு போட்டியில் கூட களம் இறக்கவில்லை. இந்த நிலையில் தான் அவர் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். 

அப்படி என்ன செய்தார் என்றால், விஜய் ஹசாரேயில் 609, சையத் முஷ்டாக் அலி டிராபியில் 548 என கர்நாடகா அணிக்காக இடது கை தொடக்க ஆட்டக்காரராக அசத்தலாக விளையாடி வருபவர் தேவ்தத் படிக்கல். 

விஜய் ஹசாரே டிராபியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 11 போட்டிகளில் விளையாடி 609 ரன்கள் குவித்தார். சராசரி 67.66. ஸ்டிரைக் ரேட் 80.09 ஆகும். அவரது ஸ்கோரில் ஐந்து அரைசதம், இரண்டு சதங்கள் அடங்கும். அதேபோல் தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 11 ஆட்டங்களில் 548 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 68.50. ஸ்டிரைக் ரேட் 178.50. இவரது ஸ்கோரில் ஐந்து அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும்.

இந்த நிலையில் தான் அவர் இந்த வருட ஏலத்தில் முக்கிய இடத்தினை பிடிப்பார் என எதிர்பார்த்த வேளையில் அவர் ஏற்கனவே ஆர்சிபி அணியில் இருந்திருக்கிறார் என தெரிய வந்துள்ளது. இவரது ஆட்டத்தை பார்த்த இந்திய அணி கேப்டனும், ஆர்சிபி அணியின் கேப்டனுமான விராட் கோலி அணியில் உள்ள பயிற்சியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் 12 வீரர்களை வெளியேற்றிய நிலையில், தேவ்தத் படிக்கலை தக்கவைத்துள்ளது. 2020 சீசனில்  அணியின் ஆடும் லெவன் அணியில் தேவ்தத்திற்கு உறுதியாக இடம் கிடைக்கும் என தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devdutt Padikkal in rcb for next season IPL


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal