சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்...! மதியம் 1 மணி வரை தூறல்–மழைக்கு வாய்ப்பு
Rain alert 4 districts surrounding Chennai Chance drizzle and light rain until 1 PM
வளிமண்டலத்தின் கீழடுக்கு பகுதியில் உருவான சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் வானிலை மாற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, இன்று குறிப்பாக 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடையிடையே லேசான மழை பெய்யக்கூடும்.
இதனால் காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், சில பகுதிகளில் சில்லென தூறல் முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rain alert 4 districts surrounding Chennai Chance drizzle and light rain until 1 PM