பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி; வறுமையில் வாடும் 07 கோடி மக்கள்; வெளியான அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் சுமார் 07 கோடி மக்கள் தற்போது வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சி தகவலை பாகிஸ்தான் திட்டமிடல்&மேம்பாடு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு மாதம் ரூ. 8,484 தேவைப்படுகிறதாகவும், இந்த தொகைக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

அதன்படி அங்கு தேசிய வறுமை விகிதம் 29%-ஐ எட்டியுள்ளது. இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத உச்சம் என்றும், 2018-19 ஆண்டை விட தற்போது வறுமை 32% அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கிராமப்புற வறுமை 28.2%-லிருந்து 36.2% ஆகவும், நகர்ப்புற வறுமை 11%-லிருந்து 17.4% ஆகவும் அதிகரித்துள்ளது. இதில் மிகவும் மோசமாக பலூசிஸ்தான் மாகாணத்தில் சுமார் 50%, அதாவது இரண்டு பேரில் ஒருவர் வறுமையில் வாடுகின்றதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, தனி நாடும் கோரும் கிளர்ச்சியாளர்களால் பலூசிஸ்தான் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தானின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.1% ஆக உயர்ந்துள்ளதோடு,  இது கடந்த 21 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வருமான இடைவெளி அதிகரித்துள்ளது என திட்டமிடல் &மேம்பாடு அமைச்சர் அஹ்சன் இக்பால் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

70 million people living in poverty in Pakistan due to severe economic crisis


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->