சிஎஸ்கே அணியின் கேப்டனாக வீரேந்தர் ஷேவாக்! பீதியை கிளப்பும் செய்தி வெளியானது!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் தற்போதுவரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி மட்டுமே இருந்து வருகிறார். இடையில் இரண்டு வருடம் சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்கப் பட்ட காரணத்தால், அப்போது புதிதாக துவங்கப்பட்ட புனே அணியின் கேப்டனாக மகேந்திரசிங் தோனி இருந்துள்ளார்.

சமீபத்தில் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதன்காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடர்வாரா என்ற சந்தேகமும் எழ ஆரம்பித்தது. சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யாராக இருக்கலாம் என்ற பேச்சும் அடிபட துவங்கியுள்ளது.

இந்நிலையில், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் ஒரு பரபரப்பு செய்தியை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள அந்த செய்தியில், "கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்பு, சிஎஸ்கே அணி தோனியை ஏலத்தில் எடுக்க எந்த முயற்சியும் எடுக்க வில்லை. மாறாக வீரேந்திர சேவாக்கை சிஎஸ்கே அணியின் கேப்டனாக அணி நிர்வாகம் தேர்வு செய்ய இருந்தது.

ஆனால், வீரேந்திர ஷேவாக் தனது டெல்லி அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்தார். இதனையடுத்து சிஎஸ்கே அணிக்கு ஒரு நட்சத்திர வீரரை தேர்ந்தெடுக்க அணி நிர்வாகம் முயன்றது. அப்போது இந்திய அணி 2007 டி20 உலக கோப்பையை வென்றது. எனவே அவர்கள் சிஎஸ்கே அணிக்கு தோனியை தேர்வு செய்தார்கள்" என பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk badrinath open talk


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal