கோப்பையை வென்ற தமிழக கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதியது. டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்தது. கர்நாடக அணியில் அதிகபட்சமாக மனோகர் 46 ரன்களை எடுத்தார். தமிழக அணி சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணியில், ஜெகதீசன் 42 ரன்னும், ஹரி நிஷாந்த 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாருக்கான், தமிழகக் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷாருக்கான் சிக்ஸர் அடித்து தமிழக அணியை வெற்றி பெறச் செய்தார். 

இந்நிலையில், சையது முஸ்தாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், சையது முஸ்தாக் அலி கோப்பையை தொடர்ந்து 2வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்!

ஷாருக் கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான - துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin wish for tamilnadu cricket team


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal