இன்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. சிறப்பு விருந்தினராக தல தோனி பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


இன்று நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

சென்னையில் இருக்கும் நேரு உள் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூலை 28-ல் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா கோலாகலத்துடன் துவங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ஆர் எம் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிக்காக 186 நாடுகளிலிருந்து 2000க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். துவக்க விழாவை போல ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியும் இன்று நேரு உள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 

இந்த நிகழ்ச்சியை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இத்தகைய நிலையில் இன்று  நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chess Olympiad closing ceremony Ms dhoni participate


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->