தொடரிலிருந்து வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் – அஸ்வினை சரியா யூஸ் பண்ணாம.. இப்படி சொல்லாதீங்க.. சிஎஸ்கே மீது ஹர்பஜன் அதிருப்தி!
Chennai Super Kings knocked out of the series Donsay things like this for not using Ashwin properly Harbhajan is unhappy with CSK
சென்னை: ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி வரலாற்றிலேயே முதல்முறையாக லீக் சுற்றிலேயே வெளியேறிய முதல் அணியாக பதிவானது. ஏப்ரல் 30 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற தோல்வியுடன் சிஎஸ்கே அணியின் பிளேஆஃப் நம்பிக்கைகள் முற்றாகக் குடிகெட்டன.
இந்த வருடம் 10 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகள் மட்டுமே பெற்ற சென்னை, புள்ளிப்பட்டியலில் கடைசி இடமான 10வது இடத்தில் நிலைத்து நிற்கிறது. இதன் மூலம், 2020, 2022, 2024 இவற்றுக்குப் பிறகு நான்காவது முறையாக பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளது. மேலும், சிஎஸ்கே வரலாற்றிலேயே முதல் முறையாக தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அணி தோல்விகளுக்குப் பிறகு சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, ₹9.75 கோடிக்கு வாங்கப்பட்ட மூத்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியிலிருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2025 சீசனில் 7 இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்த அவர், 9.29 என்ற சராசரியில் சுமாரான செயல்பாடை மட்டுமே காட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அஸ்வினை குறைவாகவே பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ள முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், “அஸ்வின் யாரிடமாவது சண்டையிட்டது போலத்தான் தெரிகிறது. இல்லையெனில் அவரை பெஞ்சிலேயே வைப்பதற்கான காரணம் என்ன? நீங்கள் ₹10 கோடிக்கு அவரை வாங்கி விளையாடவைக்கவில்லை என்றால், அது அணியின் தவறான திட்டமிடலே” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதோடு, பஞ்சாப் மைதானத்தில் பந்து சுழற்சி அதிகமாக இருந்த சூழ்நிலையில், அஸ்வின், ஜடேஜா, நூர் அஹ்மத் ஆகியோரை சேர்த்து விளையாடவைத்திருந்தால், சிஎஸ்கே வெற்றிபெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்குமெனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் தோல்விகளால் ரசிகர்கள் மனம் வருந்திக்கொண்டிருக்கும் வேளையில், அடுத்த ஆண்டுக்கான திட்டங்களை சிஎஸ்கே ஏற்கனவே தீட்டிவிட்டதாகவும், 2026 ஆம் ஆண்டு தோனியின் சாத்தியமான இறுதி சீசனை முன்னிட்டு புதிய அணியை உருவாக்கும் வேலைகள் தொடங்கியுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிஎஸ்கே அணியின் எதிர்காலம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரவிச்சந்திரன் அஸ்வின் அணியிலிருந்து நீக்கப்படுவது சரியானதா என்பது குறித்தும் தற்போதைய சூழ்நிலையில் பெரிய விவாதமாக உருவெடுத்து வருகிறது.
English Summary
Chennai Super Kings knocked out of the series Donsay things like this for not using Ashwin properly Harbhajan is unhappy with CSK