பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் இடையே, ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொரரு ஓரளவு கட்டுக்குள் வந்ததால் போட்டிகளை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது. 

மேலும், ஐபிஎல் போட்டிகளை இலங்கையில் நடத்த இலங்கை அரசும் விருப்பம் தெரிவித்திருந்தது. தற்போது, ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஐபிஎல் போட்டிகள் துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், போட்டி அட்டவணைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடையும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI Announce IPL Matches


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal