இருவர், மூவர் ஆனோம் - தரவரிசையில் ஆதிக்கம் செலுத்திய இந்திய மும்மூர்த்திகள்!   - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டதில், டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா 431 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 359 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் ,அக்சர் பட்டியல் 316 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் அசத்தியிருக்கின்றனர். 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டிரஸ்ட் தொடரில் மிக சிறப்பாக பேட்டிங் செய்த அக்சர் பட்டேல், ஆல் ரவுண்டர்கள்  தரவரிசையில் கிடுகிடுவென  இரண்டு இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார். அஸ்வின், ஜடேஜா இருவர் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில், அவர்களுடன் அக்சர் படேல் இணைந்திருக்கிறார். 

அதேபோன்று பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில்  இந்திய தரப்பில், விபத்திற்கு பிறகு ஆடாமல் இருக்கும் ரிஷப் பண்ட் ஒரு இடம் பின்தங்கி தற்போது ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். கேப்டன் ரோஹித் சர்மா பத்தாவது இடத்திலும், இறுதிப்போட்டியில் சதம் விளாசிய இந்திய வீரர் விராட் கோலி எட்டு இடங்கள் கிடு கிடுவென முன்னேறி, 13-வது இடத்தை பிடித்திருக்கிறார். அதேபோன்று இறுதிப்போட்டியில் சதம் விளாசிய கில் 17 இடங்கள் முன்னேறி 46வது இடத்தில் இருக்கிறார். அக்சர் படேல் எட்டு இடங்கள் முன்னேறி 44வது இடத்தையும் பிடித்திருக்கின்றனர். ரவீந்திர ஜடேஜா இரண்டு இடங்கள் பின் தங்கி 37 வது இடத்தையும், சத்தீஸ்வர் புஜரா 25வது இடத்தில் மாற்றமில்லாமல் இருக்கின்றனர். 

பந்துவீச்சை பொறுத்த வரையில் முதல் இடத்தில் 869 புலிகளுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். ஏழாவது இடத்தில் 780 புள்ளிகளுடன் ஜஸ்பிரிட் பும்ரா ஒரு இடம் பின்தங்கி இருக்கிறார். அதேபோன்று ரவீந்திர ஜடேஜாவும் ஒரு இடம் பின்தங்கி ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறார். முகமது சமி மாற்றம் இல்லாமல் 19வது இடத்திலும், அக்சர் பட்டேல் ஆறு இடங்கள் உயர்ந்து 28 வது இடத்தையும், உமேஷ் யாதவ் ஆறு இடங்கள் பின் தங்கி 36-வது இடத்தையும் பிடித்திருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Axar join with ashwin, jadeja in test all rounder rank


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->