மழையால் ஆஸ்திரேலியா தலையில் இடி; ஜிம்பாப்வே- அயர்லாந்து போட்டி ரத்து: தகர்ந்து ஆஸ்திரேலியாவின் குரூப் 08 சுற்று கனவு..!
Australias Group 08 round chance lost due to cancellation of Zimbabwe and Ireland match
டி20 உலகக் கோப்பையின் 10 வது தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை குரூப் ஏ பிரிவில், இந்தியா 6 புள்ளிகளுடன் சூப்பர் 08 சுற்றுக்கு பாகிஸ்தானை வீழ்த்தி தகுதி பெற்றுள்ளது.
அடுத்ததாக , நேற்று நடந்த போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 06 புள்ளிகளுடன் இலங்கை சூப்பர் 08 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இந்த "பி" பிரிவில் இலங்கையுடன், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. அடுத்து, ஜிம்பாப்வே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 04 புள்ளிகளுடன் உள்ளது.
ஆஸ்திரேலியா ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைந்ததால் 03 போட்டிகளில் 02-இல் தோல்வியை சந்தித்து 02 புள்ளிகளுடன் உள்ளது. இன்னும் ஓமனுடன் விளையாட வேண்டியுள்ளது.

இந்நிலையில் இன்று மதியம் 03 மணிக்கு இலங்கையில் உள்ள பல்லேகலேயில் நடைபெறவிருந்த ஜிம்பாப்வே- அயர்லாந்து இடையிலான போட்டி மழையினால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே தோல்வியடைந்தால்தான் 03 போட்டிகளில் 02-என்று ஆஸ்திரேலியா அடுத்த அணியாக ரன்ரேட் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது. ஏனெனில், இன்னும் ஓமனுடன் விளையாட வேண்டியுள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் ஜிம்பாப்வே- அயர்லாந்து இடையிலான போட்டி மழையால் டாஸ் கூட போடாத நிலையில், கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஜிம்பாப்வே 01 புள்ளி பெற்று சூப்பர் 08 சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் சூப்பர் 08 சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
English Summary
Australias Group 08 round chance lost due to cancellation of Zimbabwe and Ireland match