'செல்வப்பெருந்தகையும், நானும் அண்ணன்-தம்பி போல் செயல்பட்டு வருகிறோம்; எங்களுக்குள் பிரச்சினையும் இல்லை'; மாணிக்கம் தாகூர் எம்.பி. பேச்சு..! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையும், நானும் அண்ணன்-தம்பி போல் செயல்பட்டு வருகிறோம்; எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இன்று, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது மாணிக்கம் தாகூர் எம்.பி., கட்சித் தலைமையிடம் பேசிய பின்னரே, ஆட்சியில் பங்கு என்று கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், மேலும் கூறியுள்ளதாவது: பல ஆண்டுகளாக டிஎன்டி சான்றிதழ் கேட்டு குறிப்பிட்ட சமுதாய மக்கள் கோரிக்கை வைத்து வரும்நிலையில், ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதன் அடிப்படையில் நீண்ட கால கோரிக்கையான டிஎன்டி சான்றிதழ் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை வளர்த்தெடுத்தது காங்கிரஸ்தான் என தவெக நிர்வாகி நிர்மல்குமார் தெரிவித்தது குறித்த செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'அது அவருடைய கருத்து' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திரிஷா குறித்து இழிவாக பேசியதைப் போலவே, அவரது கட்சி நிர்வாகிகளும் பேசி வருகின்றனர்; இது கண்டிக்கத்தக்க விஷயம் என்று கூறியுள்ளார்.

அத்துடன், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் நன்மைக்காக காங்கிரஸ் கட்சி பணியாற்றும், இந்தியா கூட்டணியினர் தமிழ்நாட்டின் நன்மைக்காக போராடுகிறோம் என்று தெரிவித்துள்ளார். எங்களைப் பொறுத்தவரை தமிழக முதல்வர் கூறியதுபோல், இந்தப் போராட்டம் டெல்லிக்கான போராட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.  

தமிழ்நாடு விஷஸ் டெல்லி என்கிற ஒன்றுக்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றும், எங்களைப் பொறுத்தவரையில் அதிக நம்பிக்கை உள்ளது, இந்த முக்கியமான போராட்டத்தில் தமிழ்நாடு வெற்றி பெறும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I have no problem with selvaperunthagai says MP Manickam Thakur


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->