உலகக்கோப்பையை காலில் மிதித்த ஆஸ்திரேலியாவிற்கு தொடரும் மரண அடி! ஒரு வரலாற்று வெளியேற்றம்! - Seithipunal
Seithipunal


இந்தியாவிலும் இலங்கையிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில், ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலியா குரூப் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

மழையால் கை நழுவிய வாய்ப்பு
வெளியேற்றத்தின் பின்னணி: 'பி' பிரிவில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேவிடம் அடைந்த தோல்வியால் சூப்பர் 8 வாய்ப்பை ஏற்கனவே சிக்கலாக்கிக் கொண்டது.

ஜிம்பாப்வே முன்னேற்றம்: இன்று நடைபெறவிருந்த ஜிம்பாப்வே - அயர்லாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஜிம்பாப்வேவிற்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் 5 புள்ளிகளுடன் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

வரலாற்றுச் சரிவு: இதன் விளைவாக ஆஸ்திரேலியா தொடரிலிருந்து வெளியேறியது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில், 2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா குரூப் சுற்றோடு வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

2023 உலகக்கோப்பையை காலில் மிதித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு தொடரும் சறுக்கல்கள்

2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற பிறகு, ஆஸ்திரேலிய அணி ஐசிசி நடத்திய அடுத்தடுத்த 4 தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வருகிறது:

2024 டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றோடு வெளியேற்றம்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் தோல்வி.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து மகுடத்தை இழந்தது.
தற்போதைய தொடர்: இப்போது முதல் சுற்றிலேயே வெளியேறிப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மதிப்புக்கு உரிய உலகக்கோப்பையை காலில் மிதித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இந்த தண்டனை தேவைதான் என்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Australia ICC Slump Historic T20 World Cup Exit as Zimbabwe Advances


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->