டி20 வரலாற்றில் இமாலய வரலாறு! 300 ரன்குவிப்பு! 9 பந்தில் அரைசதம்! 273 ரன் வித்தியாசத்தில் வெற்றி! - Seithipunal
Seithipunal


ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் ஆட்டங்கள் இன்று முதல் தொடங்கியுள்ளது. 

முதல் ஆட்டத்தில் நேபாள் - மங்கோலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மங்கோலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய நேபால் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும், டெஸ்ட் மேட்ச் விளையாடுவதுபோல் ஆடி, சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய கௌஷால் மல்லா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் சதத்தை போர்த்தி செய்ததுடன், 50 பந்துகளில் 8 பவுண்டரிகள் 12 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் குவித்தார். 

டி20 ஆட்டங்களில் அதிவேக சதம் அடித்த ரோகித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் சாதனையையும் கௌஷால் மல்லா தகர்த்தெறிந்துள்ளார்.

மேலும், நேபால் வீரர் திபேந்தர் சிங் 9 பந்துகளில் அரை சதம் அடித்து, டி20 சர்வதேச போட்டிகளில் 12 பந்துகளில் அரை சதம் அடித்த இந்திய வீரர் யுவராஜ் சிங் சாதனையை தகர்த்து இருக்கிறார். 

இறுதிவரை ஆட்டமிழக்காத திபேந்தர் சிங் 10 பந்துகளில், 8 சிக்ஸர்களுடன் 52 ரன்களை குவித்தார்.

உச்சபட்சமாக 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் நேபாள் அணி முதல் முறையாக 300 ரன்கள் கடந்த அணி என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைக் குவித்தது. 

இதனையடுத்து 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மங்கோலியா அணி 13.1 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 41 ரன்களை மட்டுமே எடுத்து, இமாலய தோல்வியை சந்தித்தது.

மங்கோலியா அணியில் தவாசுரேன் மட்டுமே இரட்டை இலக்க ரன்னை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒன்று இரண்டு ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற முதல் அணி என்ற உலக சாதனையையும் நேபால் அணி படைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Asian Games T20 cricket nepal vs mongolia match result


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->