50 க்கு ஆல்-அவுட்! இலங்கையை சிதைத்த சிராஜ்!  - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை இறுதி போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்து வீச்சால் இலங்கை அணி 50 ரங்களுக்கு ஆல் அவுட்டானது.

முகமது சிராஜ் வீசிய 7 ஓவர்களில், 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.  

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தாமதமாக துவங்கிய நிலையில், இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை பறிக்கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 13/6 ரன்கள் எடுத்து இருந்தது. ஹர்திக் 2 விக்கெட்களையும், பும்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.

15.2 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 50 ரன்களை மட்டுமே எடுத்து. அதிகபட்சமாக மெண்டிஸ் 17 ரன்னும், ஹிமந்தா 13 ரன்னும் எடுத்தனர். பெரெரா உள்ளிட்ட 5 வீரர்கள் தக் அவுட் ஆகி வெளியேறினர்.

இலங்கை அணியின் மோசமான ஆட்டங்களில் இது இரண்டாவது ஆட்டமாக இடம்பிடித்துள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asian Cup 2023 INDvsSL 50 all out


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->