ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி : இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதல்.! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன.

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

 இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

சூப்பர்-4 சுற்றில் 6 போட்டிகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 11-ம் தேதி துபாயில் இறுதிப் போட்டி நடைபெறும். 

இதில், குரூப் சுற்றில் விளையாடிய பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர்-4 சுற்றில் மீண்டும் ஒருமுறை மோத உள்ளன. அதன்படி, இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்று 2வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது சூப்பர்-4 சுற்று போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

லீக் சுற்று போட்டியில், இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவும் - பாகிஸ்தானும் மீண்டும் மோத உள்ளதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asia Cup super 4 india vs pakistan match today


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->