விருச்சிகத்துக்கு மன மகிழ்ச்சி.. தனுசுக்கு நிதானம்.. உங்களின் தின பலன் என்ன?..! - Seithipunal
Seithipunal


இன்றைய நாளில் உங்கள் ராசிக்கான பலன்கள் என்னென்ன தெரிந்துகொள்வோம்.

மேஷம்: இன்றைய நாளில் உங்களுக்கு கவனம் அவசியமாகிறது. பண விஷயங்களை கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டும். வீண்வாகுவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்: உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் காணும். பண வரத்து அதிகரிக்கும். ஆனால், இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் போது சற்று கவனம் தேவை. மனம் நிலை கொள்ளாமல் அலை பாய்ந்து கொண்டு இருக்கும்.

மிதுனம்: நீங்கள் எதிர்பார்த்த லாபம் இன்று கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். புதிய முடிவுகளில் யோசித்து எடுப்பது நன்மை தரும்.

கடகம்: இன்றைய நாளில் உங்களுக்கு கவனம் தேவை. குடும்பத்தில் மற்றும் கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்படலாம். உடல்நலத்தில் வேண்டும்.

சிம்மம்: குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.  செல்வம் சேரும் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். இன்று ஒரு முடிவு எடுக்கும் போது தீர ஆலோசனை செய்வது நல்லது.

கன்னி: இன்று நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும் நாள். நண்பர்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  வியாபாரம் செய்வர்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும்.

துலாம்: உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும் நல்ல நாள்.

விருச்சிகம்: மன மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட  நாட்களாக எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் கூடும், உங்கள் பேச்சின்  மூலம் வெற்றியை பெற இயலும்.

தனுசு: நீங்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்புகள் அகலும்.யாருக்காவது வாக்கு தருவதற்கு முன் ஒரு தடவைக்கு பல் முறை சிந்தித்து செயல்பட வேண்டும்.

மகரம்: கடினமான முயற்சிகளை மேற்கொள்ளும் நாள் இன்று. எதிர்பார்த்த லாபம்  வந்து சேரும். கடன் தொல்லைகள் நீங்கி வாழ்வில் புதிய முயற்சிகள் ஏற்படும்.

கும்பம்: உங்கள் துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டிய நாள் இன்று. தேவையான பண உதவி கிடைக்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த்ஃஅ உதவிகள் கிடைக்கும்.

மீனம்: அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கனவமாக செய்ய வேண்டும்.  மன அமைதி உண்டாகும். நண்பர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

zodiac benefits Today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->