புரட்டாசியில் நவராத்திரி கொண்டாடப்படுவது, இதனால் தானா.? எமனின் கோரைப்பற்கள் காலத்தில் இது முக்கியம்.! - Seithipunal
Seithipunal


புரட்டாசி, ஐப்பசி மற்றும் சித்திரை உள்ளிட்ட மாதங்களில் நவராத்திரி கொண்டாடப்பட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. முறையே சரத் ருது மற்றும் வசந்த ருது என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதங்களில் ஏன் நவராத்திரியை கொண்டாட வேண்டும் என்று நமக்கு தோணலாம். 

இந்த மாதம் எமனின் கோரைப்பற்கள் எனவும், இதனால் மனித குலம் கடுமையான நோய்களால் தாக்கப்படும் அபாயம் இருக்கிறது என்றும், இந்த நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்வதற்காகவே நவராத்திரி வழிபாடு செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

நாம் மனதார சண்டிகையை வணங்கினால் நோய்களை தவிர்க்கலாம். இந்த சண்டிகையை 18 கைகளை கொண்டவள் ஆயுதம் ஏந்துபசள், இவள் மகாவீரியம் கொண்டவள். 

எப்படிப்பட்ட துக்கங்களையும் தூக்கி எறிய கூடிய வல்லமை இருக்கிறது. இவளை கொண்டாட தான் இந்த நவராத்திரி ஏற்பாடு செய்யப்பட்டது. மகாளயபட்சம் முடிந்த அடுத்த தினத்தில் இருந்து நவராத்திரியை கொண்டாடினால், நமக்கு வரும் நோய் நொடிகள் ஓடிவிடும். 

நவராத்திரி விரதம் பிரதமை திதியில் துவங்கி, நவமியில் முடிகிறது. இந்த நாட்களில் அம்பிகையை பூஜை செய்து வந்தால், அம்மை நோய் கிரக தோஷங்களில் இருந்து விலகலாம். 

இதனால், தான் புரட்டாசி மாதங்களில் நவராத்திரி விழாவை கொண்டாடுகின்றோம். நவராத்திரி பூஜை ஆண்டுக்கு நான்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என புராணம் கூறுகிறது.

வட மாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை தான் நவராத்திரியாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜோதிட ரீதியான காரணங்களும் இருக்கின்றது. கோள் சாரம் என்று குறிப்பிடப்படும். 

இதில் சூரியனுக்கு மிக முக்கியத்துவம் இருக்கிறது. புதனுக்குரிய கன்னி ராசியில் சூரியன் புரட்டாசி மாதத்தில் சஞ்சரிப்பார். இதனால் தான் கலைமகளை இந்த நாட்களில் கொண்டாடுவார்கள். 

நடனம், இசை, விளையாட்டு உள்ளிட்ட கலைகளை பயில்பவர்களும் விஜயதசமி நாட்களில் துவங்குகின்றனர். புரட்டாசியில் வரும் இந்த நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அந்த காலத்தில் கூறுவார்கள்.

கல்வி மட்டும் இல்லாமல் மனிதனுக்கு, தைரியமும் அவசியம். அவற்றைப் பெற்று வாழ்வு வளம் பெற, புதனுக்குரிய புரட்டாசியில் கலைமகள் அலைமகள் மற்றும் மலைமகள் மூன்று தேவதைகளையும் வணங்குகிறோம். புரட்டாசி மாதத்தில் பிறந்தால் புது வாழ்வு அமையும் என்று பெரியோர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why navarathiri celebration on Purattasi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->