அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு கோவிலுக்கு செல்லக் கூடாது ஏன் தெரியுமா.?
Why eat nonveg and don't go temple
பொதுவாகவே உணவிற்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு உணவு அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவதும், உணவில் காரம் அதிகமாக சேர்த்து சாப்பிட்டால் கோபம் வருவதும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இதில், நாம் கோயிலுக்கு செல்லும்போது சுத்தமாக செல்ல வேண்டும். இதில் சுத்தம் என்பது குளிப்பது மற்றும் நல்ல ஆடையை அணிவது மட்டுமில்லை மனதையும் சேர்த்து குறிக்கிறது. மனதளவில் மந்த நிலையில் இருந்தால் அதுவும் சுத்தத்தை தராது.

அந்த வகையில் இந்தியாவில் உள்ள சித்தர்கள், ரிஷிகள் போன்ற ஆன்மீகவாதிகள் அதிக இறை பக்தியுடன் இருப்பதால் அவர்கள் பெரும்பாலும் மாமிச உணவுகளை தவிர்த்து வந்தனர். மேலும் இறை வழிபாட்டின் போது மாமிச உணவுகளை உண்பதையும் தவிர்க்க வலியுறுத்தியுள்ளனர்.
அதற்கு காரணம் கோயிலுக்குள் செல்லும்போது நேர்மறையான எண்ணங்களை உணரக்கூடிய ஆற்றலை நாம் இழந்து விடுகிறோம். அந்த வகையில் அசைவ உணவுகள் உண்பதால் கோயிலுக்குள் செல்லும்போது நமது உடலில் ஏற்படும் சில தொந்தரவுகளால் நமக்கு கிடைக்கும் நேர்மறையான ஆற்றல் குறைகிறது.

எனவே கோவிலுக்கு செல்லும்போது எளிமையான உணவு சாப்பிட்ட பிறகு செல்லலாம். அப்போது நமது மனது எளிமையாகவும், மகிழ்ச்சியுடனும் இருப்பதால் நமது மனதுக்கு தேவையான மேலும் நேர்மறையான எண்ணங்கள் கிடைக்கிறது. அது நமது உடலையும் மனதையும் மகிழ்ச்சிப்படுத்துகிறது. ஒருவேளை அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு பிறகு குளித்துவிட்டு கோயிலுக்கு சென்று வரலாம்.
English Summary
Why eat nonveg and don't go temple