விளக்கேற்றும் முன்.. இந்த பதிவை படித்து விட்டு விளக்கேற்றுங்கள்.! - Seithipunal
Seithipunal


விளக்குகளும்... அதன் பலன்களும்:

எந்தவொரு சுபகாரியத்தை தொடங்கும் முன்பு, முதலில் பூஜையறையில் விளக்கு ஏற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். பூஜையறையை தூய்மையாக வைத்திருந்தோம் என்றால் வீட்டில் எப்போதும் லட்சுமி குடியிருப்பாள் என்பது ஐதீகம். வீட்டில் எந்த பூஜையையும் செய்வதற்கு முன் விளக்கை நன்றாக கழுவி பூவும், பொட்டும் வைத்து மங்கல கரமாக தீபம் ஏற்றி வர நல்ல பலன்கள் கிடைக்கும்.

பஞ்சலோக விளக்கு, வெள்ளி விளக்கு, பாவை விளக்கு, சர விளக்கு, காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு, கோடி விளக்கு, தூண்டா மணி விளக்கு மற்றும் அகல் விளக்கு என விளக்குகளில் பல வகைகள் உள்ளன. எனவே அவரவர் வசதிகேற்ப மன தூய்மையுடன் சிறு மண் விளக்கையாவது வீடுகளில் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவது நல்லது.

பொதுவாக விளக்குகளில் ஐந்து முகங்கள் இருக்கும். ஐந்து முக விளக்குகளை அனைத்து நேரங்களிலும் ஏற்றி வைப்பது என்பது இயலாது. அதனால் ஒரு முக விளக்கையோ அல்லது இரண்டு முக விளக்கையோ தினமும் ஏற்ற வேண்டும்.

வீட்டில் வழக்கமாக வைத்து வழிபாடு செய்யும் காமாட்சி விளக்கை போல குத்துவிளக்கும் புனிதமானது. இந்த விளக்கானது செங்குத்தாக நிமிர்ந்து நிற்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கானது அனைத்து பூஜையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐந்து முக குத்துவிளக்கு பூஜையறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம்.

ஒரு முக விளக்கு ஏற்ற மத்திமம் உண்டாகும்.

இரண்டு முக விளக்கு ஏற்ற குடும்ப ஒற்றுமை பெருகும்.

மூன்று முக விளக்கு ஏற்ற புத்திர பாக்கியம் கிடைக்கும்.

நான்கு முக விளக்கு ஏற்ற மாடு, மனை வளம் சேரும்.

ஐந்து முக விளக்கு ஏற்ற செல்வம் செழிக்கும்.

பொதுவாக தூய பஞ்சினால் திரியிட்டு விளக்கேற்றுவோம். இதனால் குடும்ப ஒற்றுமை போன்ற நற்பலன்கள் நடைபெறும். ஆனால் விசேஷ பலன்களை பெற சிறப்பு திரியை ஏற்ற வேண்டும்.

அதாவது மஞ்சள் நிறம் கொண்ட திரியை ஏற்றினால் அம்பாளின் கருணை கிடைப்பதோடு, மன தைரியம் கூடும். சிவப்பு நிற திரியை ஏற்றினால் தடைபட்ட திருமணம் சிறப்பாக நடைபெறும். வாழைத்தண்டு திரி ஏற்றினால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

வெள்ளெருக்கு பட்டையை திரியாக்கி விளக்கேற்றினால் செல்வங்கள் பெருகி வாழ்வு வளம் பெறும். தாமரை தண்டின் நாரை திரித்து விளக்கு ஏற்றும்போது தெய்வக் குற்றங்கள் அகன்று, தீய சக்திகள் விலகி விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vilakketrum mun Idhaiyellam kandippaga Kavanikkavum


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal