சமயபுரம் கோவிலில் துயரம்! மண்டப மேற்கூரை இடிந்து பெண் பக்தி பலி...! - இரவு தங்கியவர்களுக்கு அதிர்ச்சி!
Tragedy at Samayapuram temple roof hall collapsed killing female devotee Shock those who stayed overnight
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆண்டுதோறும் திரளான பக்தர்கள் கூடும் முக்கிய புண்ணியத் தலமாக விளங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து, இரவு தங்கி அதிகாலையில் அம்மனை தரிசித்து செல்லும் ஆன்மிக மரபு தொடர்ந்துவருகிறது.

இந்நிலையில், தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர்கள் சிலர் சன்னதி வீதியில் உள்ள மண்டபத்தில் இரவு தங்கி உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண்டபத்தின் கான்கிரீட் மேற்கூரை திடீரென இடிந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த பெண் பக்திகள் மீது விழுந்தது.
இந்த விபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பந்துருத்தியைச் சேர்ந்த 32 வயதான நதியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அருகில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு, ரத்தக் காயங்களுடன் படுத்திருந்த இரு பெண்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த திடீர் விபத்து, சமயபுரம் கோவில் வளாகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி, பக்தர்கள் மத்தியில் கவலைக்குரிய சூழலை உருவாக்கியுள்ளது.
English Summary
Tragedy at Samayapuram temple roof hall collapsed killing female devotee Shock those who stayed overnight