திருப்பரங்குன்றம் முருகன் கோயில் விதி: கார்த்திகை தினத்திற்கு மட்டுமே தீபம் ஏற்றலாம்..! - கோயில் அர்ச்சகர்கள் கடிதத்தில் அறிவிப்பு
Thiruparankundram Murugan Temple Rule Deepam lit only Karthigai Day Announcement letter from temple priests
முருகன் கோயில் அர்ச்சகர்கள், கோயில் செயலாளர் மூலம் வெளியிட்ட அறிவிப்பில், கார்த்திகை தீபத் திருவிழா தவிர பிற நாட்களில் தீபம் ஏற்றுவது சம்மதிக்கப்படவில்லை என்றும், இது வழக்கத்திற்கு மாறான செயலாகும் என்றும் வலியுறுத்தினர்.
அறிக்கையில் குறிப்பிட்டதாவது," சிவாகம சாஸ்திரங்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை சிறப்பு முறையில், கோபுரங்கள், மண்டபங்கள் மற்றும் பிரகாரங்களில் அதிவாசங்களுடன் நடத்துவதற்கே அதிகாரம் அளிக்கின்றன.
அந்த நாளில் திருக்கோவில் அருகிலுள்ள மலைப்பாதைகள் மற்றும் கிரிவல பாதைகள் போன்ற இடங்களில் தீபம் ஏற்றுதல் சிறந்த பலன்களை தரும்.
கார்த்திகை மாத நட்சத்திரத்தோடு பௌர்ணமியிலும் தீபம் ஏற்றுவது உத்தரக் காமிகாகமத்தில் குறிப்பிட்டுள்ளது.
பிற நாட்களில் தீபம் ஏற்றுவது இவ்வித விதிமுறையில் குறிப்பிடப்படவில்லை என்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.
English Summary
Thiruparankundram Murugan Temple Rule Deepam lit only Karthigai Day Announcement letter from temple priests